டோக்கியோ மற்றும் நகோயாவை இணைக்கும் பாதையில் உள்ள சசகோ சுரங்கப் பாதையில் நேற்றுக் காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுரங்கப் பாதையின் கொங்க்ரீட் திடீரென சரிந்து விழுந்து அங்கு பயணித்துக் கொண்டிருந்த கார்களின் மேல் விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதி தீப்பற்றி எரிந்துள்ளதோடு அங்கு பல சடலங்கள் சிக்கிக் கிடப்பதாக மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சுரங்கப் பாதை ஜப்பானில் உள்ள மிக நீளமான சுரங்கப் பாதைகளில் ஒன்றாகும்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.