......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

'எதிரணி எழுந்து செல்லாமல் எதிர்த்து அறிக்கையிட்டிருக்கலாம்'

(அழகன் கனகராஜ்)

குற்றப்பிரேரணையில் உள்ள குற்றங்களில் ஒன்றுக்கு மட்டுமே பிரதம நீதியரசர் பதிலளித்தார். அந்த தெரிவுக்குழுவுக்கு தன்னுடன் ஒரேயொரு சட்டத்தரணியை மட்டுமே அழைத்துவர முடியும். எனினும், 7 சட்டத்தரணிகளை தன்னுடன் அழைத்து வருவதற்கு நாம் இடமளித்தோம். என்று நாடாளுமன்ற தெரிவிக்குழுவின் தலைவரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.


இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்றிரவு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தெரிவுக்குழு விசாரணையில் இருந்து பிரதம நீதியரசர்  வெளியேறியதுடன் எதிரணியினரும் வெளியேறி விட்டனர். எதிரணியினர் எழுந்து செல்லாமல் எமது அறிக்கைக்கு எதிரான அறிக்கையொன்றை சமர்ப்பித்திருக்கலாம்.

பிரதம நீதியரசருக்கு எதிராக எம்மால் எந்தவிதமான ஆவணங்களும் முன்வைக்கவில்லை. அவரிடம் இருந்த ஆவணங்கள் மட்டுமே எம்மால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், நீதியரசர் ஸ்ரீராணி திலகவர்தன ஆகியோரே தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தனர்.  எதிரணியினரும் வெளிநடப்பு செய்யாமல் இருந்திருந்தால் அவர்களிடம் எதிரணியினர் குறுக்கு விசாரணை செய்திருக்கலாம்.

எதிரணியினர்  வெளிநடப்பு செய்ததன் பின்னர் நாங்கள் என்ன செய்வது. நாம் விசாரணைகளை முன்னெடுத்துச்சென்றோம் என்றார்.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE