......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

'வெலிக்கடை கலவரம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரிக்கவில்லை'

(ஹபீல் பரிஸ்)

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும்  படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தருவதாக கூறியிருந்தது. 

இந்த அறிக்கைகள் தொடர்பிலும் சிறைச்சாலை படுகொலை தொடர்பிலும் விடையளிக்கப்படாத பல வினாக்கள் உள்ளன என ஐ.தே.க.வின் ஹரின் பெர்னாண்டோ எம்.பி. கூறினார். 

இந்த அறிக்கை நம்பக்கூடியதாக இல்லாதிருப்பினும் அறிக்கையை வெளியிடுவது மிக மிக முக்கியமான விடயம் எனவும் அவர் கூறினார். 

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டபடியால் மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணையை செய்யாதுள்ளது என  மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறினார். 

இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற சூழல் மற்றும் நிலைவரம் குறித்து அமைச்சரோ அல்லது வேறு அமைப்புக்களோ எந்த விவரத்தையும் தமக்கு வழங்கவில்லை எனவும் பிரியந்த பெர்னாண்டோ கூறினார். 

கைதிகளை வரிசையாக நிறுத்தி பெயர்களை பட்டியல்படுத்திய பின் படைகள் அவர்களை சுட்டுக்கொன்றதாக பல கைதிகள் ஊடகங்களுக்கு கூறியிருந்தனர். 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE