......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

யூத குடியேற்றங்களுக்கு எதிராக பாதுகாப்பு சபை செல்ல திட்டம்


ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 1,500 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இஸ்ரேல் அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் இந்த சட்ட விரோத கட்டுமானத்திற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு கோரிக்கை விடப்போவதாக பலஸ்தீனம் கூறியுள்ளது.

ரமட் ஷ்பொமொ பகுதியில் கட்டுமான பணிகளை ஆரம்பிக்க மாவட்ட திட்டமிடல் ஆணையம் முன் அனுமதியை வழங்கியுள்ளதாக இஸ்ரேல் உள்துறை அமைச்சின் பேச்சாளர் அறிவித்துள்ளார். பலஸ்தீனத்திற்கு ஐ.நா.வின் அங்கத்து வமல்லாத பார்வையாளர் அந்தஸ்து கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே இந்த கட்டுமான திட்டத்தை இஸ்ரேல் அறிவித்திருந்தது. இந்த திட்டம் அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த கட்டுமானத்தால் மேற்குக் கரையின் வடக்கு மற்றும் தென்பகுதிக ளுக்கான தொடர்பு துண்டிக்கப்படுவதாக பலஸ்தீன நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் சட்ட விரோத கட்டுமானம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தை நடத்துமாறு கோரவுள்ளதாக பலஸ்தீன ஜனாதிபதியின் பேச்சாளர் நவில் அபு ரதைன் ஏ. எப். பிக்கு கூறினார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE