......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

மத்திய கிழக்கு தொழிலுக்கு செல்வோருக்கு விசேட செல்லிட பேசிகள்


எப். எம். பைரூஸ்
இலவச சிம் கார்ட்; ரீலோட் வசதிகள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்களுக்குச் செல்வோருக்கு விசேட செல்லிடத் தொலைபேசி வசதிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெற்றுக் கொடுக்கும்.

அமைச்சர், திலான் பெரேராவின் பணிப்பின் பேரில் இத் திட்டம் நடை முறைக்கு வருகிறது.
வெளிநாட்டு தொழில்களுக்குச் செல் வோர் தமது உறவினர்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு இப் புதிய திட்டம் பெரிதும் துணை செய்யும். இத்தகைய ஒரு தொடர்பாடல் முறையை ஆசியாவில் ஆரம்பிக்கும் முதலாவது நாடு இலங்கையாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழில்களுக்குச் செல்வோருக்கு கையடக்கத் தொலைபேசி “சிம்”கார்ட் தொழிலுக்குச் செல்ல முன்னர் இலவசமாக வழங்கப்படும்.
அந்தந்த நாடுகளில் இருந்து பேசக்கூடிய வகையில் இந்த சிம் கார்ட் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் “ரீலோட்” வசதிகளும் அடங்கியுள்ளன. முதல் கட்டமாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்யம் ஆகிய நாடுகளுக்குச் செல்வோருக்கு இந்த வசதி ஆரம்பத்தில் ஏற்படுத்தப்படும். பின்னர் மற்றைய நாடுகளுக்கும் வசதி வழங்கப்படும். டயலொக் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வைபவம் அமைச்சர் திலான் பெரேரா தலைமையில் நாளை 11 ஆம் திகதி நடைபெறும்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE