......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 2 December 2012

மாகாண விவசாய அமைச்சின் நிதியை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்



(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கென 2013 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினைப் பயன்படுத்தும் போது மாகாணசபை உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சுக் காரியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபையின்; 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், விவசாய துறைக்காக 60 மில்லியனும் ரூபாவும், மீன்பிடித்துறைக்கு 15 மில்லியனும் ரூபாவும், கால்நடை மற்றும் சுற்றுலா துறைகளுக்கு தலா 45 மில்லியனும் ரூபாவும், கிராமிய கைத்தொழில் துறைக்கு 9 மில்லியனும் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிதியினை பயன்படுத்தும் போது, மாகாணசபை உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பிலேயே இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையும் இதில் கலந்து கொண்டார்.

மேற்படி கலந்துரையாடலில், மாகாணசபை உறுப்பினர்கள் தமது கோரிக்கைகள் மற்றும் யோசனைகளையும் முன்வைத்தனர்.

இதன்போது, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.அன்வர், ரி.எம்.ஜயசேன, ஏ.எல்.எம்.நசீர் அமைச்சரின் செயலாளர் கே.பத்மநாதன் மற்றும் அமைச்சின் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE