கட்டார், ரையான் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சோந்த அப்துல் சலாம் அக்ரம் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிழந்துள்ளார்.
கட்டார், ரையான் நகரில் விற்பனை பிரதிநிதியாக தொழில் புரிந்து வந்த இவர் வீதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை கடக்க முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாஸாவை கட்டாரில் அடக்கம் செய்யப்பட்டதாக மூதூரிலுள்ள அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விடுமுறையில் வீடு வந்த இவர் கடந்தவாரம் மீண்டும் கட்டாருக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.