......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

குவைட்டில் அரசுக்கு எதிராக அமைதி ஆர்ப்பாட்டம்


எதிர்க் கட்சிகளின் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டதற்கு எதிராக குவைட்டில் ஆயிரக்கணக்கானோர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாகவும் இடம்பெற்ற இந்த அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு குறுக்கீடு செய்யாமல் பொலிஸார் ஒதுங்கி நின்று கண்காணித்தனர்.

“இந்த பாராளுமன்றம் முறையற்றது”, “தேர்தல் முறை சட்டவிரோதமானது” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். குவைட்டில் கடந்த ஒக்டோபரில் கொண்டு வரப்பட்ட தேர்தல் முறை மாற்றும் ஆணையின்படி ஒரு பிரஜைக்கான வாக்குகள் 4 இல் இருந்து ஒன்றாக குறைக்கப்பட்டது.
இதனால் கடந்த டிசம்பர் முதலாம் திகதி இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்க் கட்சிகள் புறக்கணித்தன.
இதனால் பாராளுமன்றத்திற் கான 50 ஆசனங்களையும் ஆளும் ஷெக் சபா அல் அஹ்மட் அல் சபா மன்னர் ஆதரவாளர்களே கைப்பற்றினர்.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE