ஜனவரி முதல் ஆரம்பம்
நாட்டிலுள்ள 10,000 பாடசாலைகளின் செய ற்பாடுகளை மாதந் தோறும் கண்டறிவதற்கான புதிய வேலைத்திட்டம் ஜனவரி முதல் ஆரம்பமாகும்.
கல்வி அமைச்சு இதுபற்றித் தீர்மானித்துள்ளது. பாடசாலைகளின் சீரான நிர்வாகம், சிறந்த கல்விப் போதனை போன்றவையே இத்திட்டத்தின் முக்கிய இலக்கு என அமைச்சின் செயலாளர் கோதாபய ஜனரத்ன தெரிவித்தார்.
பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வள அபிவிருத்தி போன்ற வற்றுக்குப் பெருந்தொகை நிதி வருடாந்தம் செலவாகிறது. இச்செலவீனங்களால் இலவசக்கல்வி அர்த்தமயமாக வேண்டும்.
எனவே கல்வி நடவடிக்கைகள் கண்ட றியப்பட வேண்டும். மாதந்தோறும் அமைச்சு மீளாய்வுகளை செய்து முக்கியம் என்றும் செயலர் தொடர்ந்து தெரிவித்தார்.
பாடசாலை அபிவிருத்தியுடன் 41 இலட்சம் மாணவர்களின் கல்வி நிலையும் உயர வேண்டும். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் சித்திபெறாதோரின் எண்ணிக்கை குறைய வேண்டும்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் யோசனைகள் கருத்துக்களைப் பெற்று வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது முக்கியமானது.
இந்த வேலைத் திட்டம் இலக்கு கொள்ளப்பட்டவாறு மேற்கொள்ளப்படு கிறதா? என்பதை அமைச்சு மட்டத்தில் மேற்பார்வை செய்வது இதுவே முதல் முறையாகும் என்றும் செயலர் கூறினார்.
பாடசாலைகளின் மாதாந்த முன்னேற்றம் தொடர்பாக அமைச்சுக்கு அறிக்கை மூலம் அறிவிக்க வேண்டும்.
அந்த அறிக்கைகளைப் பரிசீலித்து குறைபாடுகள், பிரச்சினைகள் இருந்தால் அவற்றுக்கான தீர்வுகளை வழங்க அமைச்சு கடப்பாடுடன் செயற்படுமென்றும் அமைச்சின் செயலர் கோதாபய ஜயரத்ன தொடர்ந்து தெரிவித்தார். (எப். எம்)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.