......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

கடும்போக்கான கைதிகளுக்கு மட்டக்களப்பில் சிறை

(சுபுன் டயஸ்)

கடும்போக்கான சிறைக்கைதிகளை பலத்த பாதுகாப்புடன் தங்கவைப்பதற்கு சிறந்த இடமொன்றை மட்டக்களப்பு, மாந்தை தீவில் ஏற்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.


வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. செப்பல் வார்ட் மற்றும் "எல்" மண்டபம் ஆகிய கூடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த கடும்போக்கான சிறைக்கைதிகளே வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தினை தலைமை தாங்கி நடத்தியுள்ளனர் என்பது ஆதரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

செப்பல் வார்டில் பலத்த மேற்பார்வையின் கீழே கடும்போக்கான சிறைக்கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியசாலையொன்று மாந்தைதீவில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் இந்த வைத்தியசாலையினை ஹம்பாந்தோட்டையிலுள்ள சிறியளவான சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு பேச்சு நடத்தி வருகின்றது.

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE