......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

இயல்பு வாழ்வுக்கு குந்தகம் ஏற்படுத்த முற்பட்டதால் மாணவர் மீது நடவடிக்கை


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப் பாட்டம் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததையடுத்தே அதனை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தினகரனுக்குத்தெரிவித்தார்,

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணியாக வெளியில் வர முபட்டதை அடுத்தே அதனை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் என்று தெரிவித்த அவர், இந்த நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் திடீரென பேரணியாக வளாகத்திலிருந்து வெளியில்வர முற்பட்டனர். அவ்வாறு பேரணியாக செல்லும் பட்சத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதை கூறிய போதும் அதனை பொருட்படுத்தாது வெளியேற முற்பட்டதனாலேயே அதனை பொலிஸார் தடுத்தனர் என்றார்.
இதேவேளை, சிறிரெலோ கட்சியின் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் மாவீரர்தின சுவரொட்டிகளை ஒட்டியமை போன்ற குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயலாளர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி குற்றச்சாட்டுகளின் அடிப்படை யில் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட் டுள்ள நால்வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முற்று முழுதாகப் பொலிஸார் மாத்திரமே மேற்கொண்டனர். இதில் இராணுவத்தினர் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
இராணுவம்
அதேவேளை யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்கும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. இவ்வாறு கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய ஆகியோர் தெரிவித்தனர்.
நாட்டின் சகல பிரதேசங்களிலும் இடம்பெறுவது போன்று பொலிஸாருக்கு உதவியாக இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதிலும் எந்த ஒரு இராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படவில்லை என்று குறிப்பிட்டனர்.
வடக்கில் இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் சிறந்த உறவுகள் பேணப்பட்டு வருவதுடன் வடபகுதி மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இராணுவம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகிறது.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE