......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

இறைச்சிக்காக கொக்குகளை சுட்ட விவசாயி கைது

அட்டாளைச்சேனை சம்புநகர் வயல் பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக துப்பாக்கியினால் கொக்குகளை சுட்டு வீழ்த்திய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதுடன் சொட் கண் துப்பாக்கி ஒன்றும் 9 கொக்குகளையும் கைப்பற்றியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அட்டாளைச்சேனை சம்புநகர் வயல் பிரதேசத்தில் துப்பாக்கியால் கொக்குகளை சுட்டுக் கொண்டிருந்த அக்கரைப்பற்று முதலாம் பிரிவு டீன்ஸ் வீதியைச் சேர்நத் 51 வயதுடைய விவசாயி ஒருவரை கைது செய்துள்ளதுடன் சுட்டு வீழ்த்திய 9 கொக்குகளையும் துப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE