2011ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினர் 820பேர் இந்திய இராணுவ நிறுவனங்களில் பயிற்சி எடுத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள மேற்படி தொலைக்காட்சி நிறுவனம், இவ்வருடத்தில் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர், புதுடில்லியிலுள்ள அதி விருப்பத்துக்குரிய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையுடனான இராணுவ தொடர்புகளை சீனாவும் பாகிஸ்தானும் அதிகரித்துள்ள போதிலும் இலங்கை இராணுவத்தினரை பயிற்ற மிகவும் விருப்பப்படும் இடமாக இந்தியா காணப்படுகின்றது.
கண்டியில் இராணுவ புலனாய்வு கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கு இந்தியா கடந்த 2009இல் இலங்கைக்கு உதவியது. இலங்கையில் தற்போது 10பேர் கொண்ட இந்திய இராணுவ பயிற்சி அணியொன்று நிலைகொண்டுள்ளது.
முன்சென்று தாக்குவதற்கான இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு வழங்குவதில்லை என்ற கொள்ளையை இந்தியா பேணி வந்த போதிலும் இறப்புக்கு காரணமாகாத ஆயுதங்களை கொள்வனவு செய்ய 100 மில்லியல் அமெரிக்க டொலர் கடனை இலங்கைக்கு வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின், இரு நாடுகளும் தமது பாதுகாப்பு உறவுகளை மீளமைக்க முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.