லோரன்ஸ் செல்வநாயகம்
மனிதாபிமானமற்ற செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது சுகாதார அமைச்சு
பொது மக்களின் சுகாதார சேவையைச் சீர்குலைக்கும் வகை யில் தாதியர் தொழிற்சங்கமொன்று நேற்று நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் தோல்வி கண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சேவையிலுள்ள 80 வீதமான தாதியர்கள் நேற்றுக் கடமைக் குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சு, நாட் டின் எப்பகுதியிலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தி னால் சுகாதார சேவை தடைப்படவில்லை எனவும் தெரி வித்தது.
இதேவேளை நாட்டின் பல பாகங்களி லும் நேற்று இடம்பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்களினால் ஆயிரக்கண க்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டிய தாதியரே இவ்வாறு செயற்பட்டதை முழு நாடும் நிராகரிக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் வைத்தியசாலையை நாடி வரும் வேளை யில் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்குவது மோசமான செயலாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தாதியர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கடும் மழையிலும் போக்குவரத்து வசதியின்றி கால் நடையாக வைத்திய சாலைக்கு சென்றபோதும் அங்கு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததாகவும் பிரதேச தகவல்கள் தெரிவித்தன.
மேற்படி சங்கம் முன் வைத்துள்ள சகல கோரிக்கைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. திறை சேரி மூலம் இந்த தீர்வினை எதிர்வரும் ஜனவரியில் பெற்றுக் கொடுக்கவும் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நிலையிலேயே மேற்படி தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது என அமைச்சு தெரிவித்தது.
(ஸ)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.