......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 December 2012

எட்டு கங்கைகளில் பெருக்கு; 15 குளங்களின் வான் கதவுகள் திறப்பு


நாட்டிலுள்ள எட்டு பிரதான கங்கைகள் பெருக்கெடுத்திருப்பதால் அக்கங்கைகளு க்கு அருகில் வாழும் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணை க்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்றுத் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டிலுள்ள 71 பிரதான குளங்களில் 35 குளங்களும், 160 நடுத்தர குளங்களில் 88 குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டிலுள்ள சுமார் 15 பாரிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற் றப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் புனாணை அணைக் கட்டிலுள்ள எட்டு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கு மேலாகவும் தண்ணீர் பாய் வதாகவும் அவர் குறிப்பிட்டார். இவை தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய இரு பாரிய குளங்களும் நிரம்பி வழிகின்றன.
ஆயினும் உன்னிச்சை குளத்தில் இரண்டு வான் கதவுகள் பத்து அடிகள் உயரத்திற்கும், உறுகாமம் குளத்தில் மூன்று வான் கதவுகள் ஒன்பது அடிகள் உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்திலுள்ள அம்பகொலவெவ குளத்தின் ஒரு வான் கதவு எட்டு அடிகள் உயரத்திற்குத் திறக்கப்பட்டிருக்கின்றன.
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ராஜாங்கனை குளத்தின் எட்டு வான் கதவுகள் ஆறு அடிகள் உயரத்திற்கும் நான்கு வான் கதவுகள் ஐந்து அடிகள் உயரத்திற்கும் திறக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை அநுராதபுரம் மாவட்ட த்திலுள்ள திஸ்ஸவெவ, நாச்சிதுவ, ராஜாங்கன, வாகல்கட, மகாவிலச்சி, மகா கனதராவ, மன்னங்கட்டிய ஆகிய பாரிய குளங்களும், 49 நடுத்தர குளங்களும் நிரம்பி வழிகின்றன.
இதன் காரணத்தினால் புத்தளம் மாவட்டத்திலுள்ள எலுவன்குளப் பிரதேச மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். பதுளை மாவட்டத்தின் சொரபொறவெவ, கண்டி எல, அம்போவல, கம்பராவ ஆகிய நான்கு பாரிய குளங்களும் ஆறு நடுத்தரக் குளங்களும் மாட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பாரிய குளங்களும் வெலிகஹ கண்டிய, வடிமுனை, இத்துல்வெவ, கட்டு முறி ஆகிய நான்கு நடுத்தர குளங்களும் புத்தளம் மாவட்டத்தில் இரு பாரிய குளங்களும், மூன்று நடுத்தர குளங்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு பாரிய குளமும், மூன்று நடுத்தர குளங்களும், குருநாகல் மாவட்டத்தில் ஆறு பாரிய குளங்களும், ஐந்து நடுத்தர குளங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐந்து பாரிய குளங்களும், நான்கு நீர்த்தேக்கங்களும், 22 நடுத்தர குளங்களும் நிரம்பி வழிகின்றன.
இதேவேளை தெதுறுஓயா, வளவ கங்கை, அம்பன் கங்கை, மாதுறு ஓயா, யான் ஓயா, மீ ஓயா ஆகிய பிரதான கங்கைகள் பெருக்கெடுத்திருப்பதுடன், கிரிந்தி ஓயா, கலா ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. அதனால் இக்கங்கைகளின் அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE