By Farhan
காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட றிஸ்வி நகர் கடற்கரை பகுதியில் காத்தான்குடி நகர சபையினால் காத்தான்குடியில் நாளாந்தம் சேரும் கழிவுகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் நேற்றும்,நேற்று முன்தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர சபையினால் கொட்டப்படும் குப்பைகளினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சூழல் மாசடைவதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்ற காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்தலத்திற்கு விரைந்து இவ்விடத்தில் குப்பை கொட்டுவதில்லை என்றும் குப்பை கொட்டப்பட்டுள்ள இவ்விடத்தை மண் கொண்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவிசாளர் உறுதியளித்தைத் தொடரந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

எது எப்படி இருந்தாலும் நேற்றும்,நேற்று முன்தினமும்,இன்றும் காத்தான்குடி நகரில் காத்தான்குடி நகர சபையினால் குப்பைகள் எடுக்கப்படவில்லை.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.