அக்கரைப்பற்று மேற்கு தினகரன், அம்பாறை தினகரன் சுழற்சி நிருபர்கள்அக்கரைப்பற்று வட்டமடு வயல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17) பிற்பகல் 2.45 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் பெரிய இலுப்ப மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிர் இழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ. எல். எச். முகைடீன் தெரிவித்தார்.
உயிர் இழந்தவர் கண்ணகிபுரம் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மகேஸ்வரன் (52 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-
உயிர் இழந்த விவசாயி வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மழையுடன் பலத்த காற்று வீசியதையடுத்து வாடிக்கு ஓடிவந்துள்ளார். அதன்போது வாடிக்கு பக்கத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் முறிந்து விழுந்த கிளைக்குள் இவர் அகப்பட்டுள்ளார்.
இதையடுத்து வாடியில் இருந்த போடியார் நெஞ்சு நோவு ஏற்பட்ட நிலையில் விவசாயியை காப்பாற்றி உறவினர்களிடம் ஒப்படைத்ததையடுத்து உறவினர்கள் நேற்று முன்தினம் 4.45 மணியளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.00 மணியளவில் உயிர் இழந்துள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.