பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அவரின் சகோதரியும், மைத்துனரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஷிராணி பண்டாரநாயக்கவின் சகோதரியான ரேணுகா பண்டாரநாயக்க மற்றும் அவருடைய கணவர் கபில கருணாரட்ன ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தாம் சுமார் 23 ஆண்டுகளாக அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் சிறந்த தொழில்துறைகளில் பணியாற்றியுள்ளதாக அவர்கள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அங்கு உழைத்த பணத்தைக்கொண்டு இலங்கையான தமது தாய்நாட்டில் முதலீடு செய்வதற்கு தமக்கு உரிமையுள்ளதாகவும் ரேணுகாவும் கபிலவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்த குற்றச்சாட்டு பிரதம நீதியரசரின் மீது சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்த விளக்கத்தை அவர்கள் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.