......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 30 December 2012

சுனாமியில் உயிர் தப்பிய சிறுவன் கடலில் மூழ்கி பலி


எட்டு வருடங்களின் பின் பரிதாப நிகழ்வு

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது உயிர் பிழைத்த மாணவன் 8 வருடங்களின் பின் கல்முனை பிரதேச கடலில் மூழ்கி மரணமடைந்த பரிதாப சம்பவமொன்று வெள்ளிக் கிழமை கல்முனையில் இடம்பெற்றது.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்முனை பிரதேச மக்கள் குடியிருக்கும் கிaன் பீல்ட் வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ஏ.ஜி.எம்.சப்னாஸ் தனது நண்பர்கள் இருவருடன் கடலில் நீராடச் சென்று பாரிய அலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு காவு கொள்ளப்பட்டுள்ளார்.
இவரது ஜனாஸா வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது முகத்துவார பகுதியில் பிரதேச மக்களினால் கண்டுபிடிக்கப்பட்டது. மரணமடைந்தவருடன் கடலில் குழித்துக் கொண்டிருந்த இரு நண்பர்களும் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளனர்.
இவரது மரணம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE