......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

நீதிமன்ற அறிவிப்பு கிடைத்துள்ளது; இன்னும் தீர்மானிக்கவில்லை:அனுர

(அழகன் கனகராஜ்)

'எதற்கும் ஒரு வரையரை இருக்கின்றது. அதற்கு அப்பால் செல்லமுடியாது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்பு கிடைத்துள்ளது. அது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை' என்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.


இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்றிரவு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

நாடாளுமன்றம், நிலையியற் கட்டளை, அரசியலமைப்பு மற்றும் சட்டம் ஆகியவற்றில் நாம் நம்பிக்கை கொள்கின்றோம். அரசியலமைப்பை செயற்படுத்தும் போது நாடாளுமன்றத்திற்கு விசேட அதிகாரம் இருக்கின்றது.

ஜனாதிபதி குறைத்து மதிப்பிடவில்லை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்பு கிடைத்துள்ளது. அது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. தெரிவுக்குழுவின் செயற்பாடானது ஜனாதிபதியின் அறிவிப்புடனேயே நிறைவடையும். 

அதனால் அவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஒரு குழுவை அவர் நியமித்துக்கொள்ளலாம். அந்த குழுவை நியமிப்பதன் மூலமாக எனது தலைமையிலான தெரிவுக்குழுவை ஜனாதிபதி குறைத்து மதிப்பிடவில்லை.

2 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை

பிரதம நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் 5 குற்றச்சாட்டுகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டோம். இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுதலை செய்துள்ளோம்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு அறிவித்து பதவிவிலக்குவார்

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரமே தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பல நாடுகளில் பல முறைமைகள் இருந்தாலும்  தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி அறிவித்து விட்டு பதவி விலக்குவார். பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியலமைப்புகளிலும் இந்த முறைமையே இருக்கின்றது. 

அனுமதியின்றி பார்க்க முடியாது

பிரதம நீதியரசரை யாரும் தூற்றவில்லை. தெரிவுக்குழுவில் ஒலிவாங்கி முடுக்கிவிடப்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட சகல விடயங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன. ஒலிப்பதிவும் செய்யப்பட்டுள்ளன. அவற்றை சபாநாயகர் மற்றும் ஹன்சாட் திணைக்களத்தின் அனுமதியின்றி யாரும் பார்வையிட முடியாது.

இதய சுத்தியுடன் தயாரித்துள்ளோம்

தெரிவுக்குழுவின் அறிக்கையை இதயசுத்தியுடன் தயாரித்துள்ளோம். தெரிவுக்குழுவிலிருந்து எழுந்து சென்றிருக்காவிடின் விசாரணை 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதிவரை தொடர்ந்திருக்கும்' என்றார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE