உயர்நீதிமன்ற நீதியரசர் நிமல் காமினி அமரதுங்க தலைமையிலான நீதியரசர்கள் முழு முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குற்றப்பிரேரணைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உரிமை உள்ளது என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
நீதித்துறைக்கான சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும், நீதித்துறைக்கான சுதந்திரம் பாதிக்கப்படும் போது சட்டத்தரணிகள் தமது கடமையை உரிய வகையில் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
ஆயினும் இந்த மனுவின் வீச்சத்தை நீதிமன்றம் (பீ) மற்றும் (ஜி)ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மட்டுப்படுத்தியது.
பிரிவு(பீ) நிலையியற் கட்டளை '78 ஏ' யில் கூறப்பட்டுள்ள குற்றப்பிரேரணை செயன்முறை அரசியலமைப்பின் 4 (சீ) க்கு முரணானது என அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிவு (ஜி) அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அப்பால் நிலையியற் கட்டளை '78 ஏ' க்கு சென்றுள்ளது என அறிவிக்குமாறு கேட்டுள்ளது.
பிரதிவாதிகள் தங்களுடைய ஆட்சேபனைகளை நான்கு வாரங்களுக்குள்ளும், மனுக்கள் மீதான பதில் சத்தியக்கடதாசிகளை மனுதாரர் இரண்டு வாரத்திற்குள்ளும் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து மனு மீதான பூர்வாங்க விசாரணை 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்த நீதிமன்றம் வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.