......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

குற்றவாளியை கைது செய்ய தவறினால் தொழிற்சங்க போராட்டம்

லக்ஷ்மி பரசுராமன்
கறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக்கிய சம்பவம்
ஒட்டோ சாரதிகள் கொழும்பில் அறிவிப்பு

முச்சக்கர வண்டி சாரதியொருவர் சட்டத்தரணிகளென சந்தேகிக்கப்படும் சிலரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை முச்சக்கர வண்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையம் கடுமையாக கண்டித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் சம்பவத்திக்கு காரணமான குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்.
இல்லையேல் இலங்கையில் இதுவரையில் எவருமே முன்னெ டுத்திராத பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்த நாம் தயங்க மாட் டோமென அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்ம சேக்கர நேற்று கூறினார்.
கொழும்பு நிப்போன் ஹோ ட்டலில் நேற்றுக் காலை முச்சக்கர வண்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையத்தால் ஏற்பாடு செய்ய ப்பட் டிருந்த ஊடகவி யலாளர் மாநாட்டிலேயே லலித் தர்ம சேக்கர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பவத்தில் தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா என்பவரே தாக்கப்பட்டு ள்ளார்.
நாட்டைத் துண்டாடும் செயற்பாட்டிற்கு பிரதம நீதியரசர் துணை போவதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்படி ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை மாபெரும் எதிர்ப்பு பேரணியினை நடத்தியிருந்தது. இதில் 800 முச்சக்கரவண்டி சாரதிகளும் 800 இற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளும் கலந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், பேரணியின் இறுதியில் வந்திருந்த முச்சக்கர வண்டி சாரதி கறுப்புக் கோட் மற்றும் டை அணிந்திருந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று என்னை தாக்கியது. எனது மேற்சட்டை கிழிக்கப்பட்டுள்ளதுடன் கழுத்திலிருந்த தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது என மாநாட்டில் உரையாற்றிய ரோஹண பெரேரா கூறினார்.
தாக்குதலையடுத்து கறுப்புக் கோட் அணிந்திருந்தவர்கள் நீதிமன்றத்துக்குள்ளேயே ஓடி மறைந்ததனை தான் கண்டதனால் நிச்சயமாக தன்னை தாக்கியவர்கள் சட்டத்தரணிகளே என்பதனை உறுதியாக தெரிவிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
தலைவர் லலித் தர்மசேக்கர இதன்போது தெரிவிக்கையில், நாம் அரசாங்கத்திற்கு பின்னால் செல்வதாகக் கூறியே எமது உறுப்பினரை தாக்கியுள்ளனர். இதே சந்தர்ப்பத்தில் நாம் அவர்களை திருப்பித் தாக்கியிருந்தார் இன்று நாமே குற்ற வாளிகளாகியிருப்போம்.
நாம் அரசாங்கத்திற்காக பேசுவது உண்மைதான். இது எமது நாடு. இங்கு முன்னெடுக்கப்படுவது எமது பிள்ளை களுக்கான அபிவிருத்தி நாம் நாட்டிற்காக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக எத்த னையோ உதவிகளை செய்துள்ள நிலை யில் அவரது செயற்பாடுகளுக்கு நாம் எம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.
வெளிநாடுகளின் டொலர்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் பின்னால் செல்வதனை விட எமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக பாடுபடுவது மேல் என்பதே எமது கொள்கை என்றும் அவர் கூறினார்.
முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையம் நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம், அகில இலங்கை மீற்றர் டெக்ஸி சங்கம், தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE