......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

சுப்ரிம் சற்றா, சீனா சற்றா?: ரணில் கேள்வி

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

வான்வெளி சுற்றுவட்ட பாதையில் ஏவப்பட்டுள்ள தொடர்பாடல் செய்மதிபற்றி முரண்பாடான செய்திகள் வந்துள்ள பின்புலத்தில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டள்ள செய்மதி சுற்றுவட்ட பாதையை சீனா பயன்படுத்துகின்றதா என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.


நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இலங்கை ஊடகங்கள் இந்த செய்மதியை 'சுப்ரிம் சற்-1' என குறிப்பிடுகின்றன. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இதனை சீனா ஏவிய 'சைனா சற் 12' என குறிப்பிடுகின்றன என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சட்டப்படி இலங்கையின் விண்வெளியை சகல நாடுகளும் சுதந்திரமாக பயன்படுத்த முடியும். சர்வதேச ஒழுங்கின்படி ஒவ்வொரு நாடும் தான் ஏவும் செய்மதிகளையும் அவற்றின் சுற்றுவட்ட பாதையையும் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். 

'சைனா சற் 12' தொலைத்தொடர்பு செய்மதியானது இலங்கைக்கு ஒதுக்கிய சுற்றுவட்ட பாதையை பயன்படுத்துகின்றதா? அல்லது சீனாவுக்கு ஒதுக்கிய சுற்றுவட்ட பாதையை பயன்படுத்துகின்றதா? என்பதை ஊடகங்கள் வெளியப்படுத்தவில்லை என அவர் கூறினார்.

'சுப்ரிம் சற் 1' செய்மதியை இதே பெயரில் கூட்டாக ஏவுவதாக - இலங்கை முதலீட்டு சபையும் 'சுப்ரிம் சற் (பிரைவேட்) கம்பனியும் இணைந்து 'சைனா கிறேட் வோல்' கைத்தொழில் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக விவரமான அறிக்கையொன்றை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் ரணில் கூறினார்.

இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட செய்மதி சுற்றுவட்ட பாதை, இந்த செய்மதி திட்டத்தில் பங்காளி தெரிவு செய்யப்பட்ட விதம், சுப்ரிப் சுற்றுக்கான மொத்த செலவு, பங்குதாரர்கள், சுப்ரிம் சற் (பிரைவேட்) லிமிட்டெட்டின் பணிப்பாளர்கள் என்பவை பற்றி அரசாங்கம் விவரம் தரவேண்டும்.

அத்துடன், இந்த செய்மதி திட்டம் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் விவரத்தையும் ரணில் கோரிநின்றார். இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நாளை பதிலளிப்பார் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, 'அமைச்சர் விண்வெளி சுற்றுப்பாதையில் இருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன்' என்றார். 'நிச்சயமாக அவர் 8ஆம் திகதி தரையிறங்கி உங்கள் கேள்விக்கு பதிலளிப்பார்' என தினேஷ் குணவர்த்தன நகைச்சுவையாக பதிலளித்தார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE