பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூன்றாவது நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன்போதே, தெரிவுக்குழு மீது நம்பிக்கையில்லை என்று கூறிய பிரதம நீதியரசர் அமர்விலிருந்து வெளியேறினார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு முதலாம் இலக்க குழு அறையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணிவரை நடைபெற்றது.
அதன் பின்னர் சிறிய தேநீர் இடைவேளையொன்று வழங்கப்பட்டுள்ளது. அப்போது இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்ட பாரிய ஆவணம் ஒன்றும் தெரிவுக்குழுவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பிரதம நீதியரசரின் சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அத்துடன் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.