கண்டிக்கப்பட வேண்டியது என்கிறார் முன்னாள் சபாநாயகர் எம்.எச். மொஹமட்
நாட்டில் தோன்றியிருக்கும் பிரச் சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நாட்டு மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கும் இலங்கை மக்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனும், அவருடைய அரசாங்கத்துடனும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் சபாநாயகர் எம்.எச். மொஹமட் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரே ரணையைப் பயன்படுத்தி சாதாரண ஜனநாயக நடைமுறையை அரசிய லாக்குவதற்கு சில தரப்பினர் முயற் சிப்பதாக எம்.எச். மொஹமட் விடுத் திருக்கும் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெற் றிருந்தாலும், நீண்டகாலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி என்ற ரீதியில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, முன்னாள் சபாநாயகர் என்ற ரீதியில் இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் முன்னர் எதிர்கொண்டிருந்தோம். ஜனநாயக நடைமுறைகளைப் பாதுகாப்பதற்கே நாம் அப்போது நடவடிக்கை எடுத்திருந்தோம்.
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை என்பனவற்றின் நடவடிக்கைகள் அரசியலமைப்பினை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவற்றின் ஊடாக நாட்டு மக்களின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்கள் தமது இறைமையை காலம்காலமாக அனுபவித்து வருகின்றனர். இவையாவும் அரசி யலமைப்பின் ஊடாக முன்னெடுக் கப்படுகின்ற ஜனநாயக செயற்பாடுகள்.
இது போன்று அரசியலமைப்பு உட்பட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக செயற்பாடுகளை அரசியலாக்குவது ஜனநாயகமற்ற செயற்பாடு என்பதுடன், இவை கண்டிக்கப்பட வேண்டியவை. அதேநேரம், ஜனநாயக செயற்பாடுகளை குழப்புவதற்காக மக்களைத் தூண்டிவிடும் செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற ரீதியில் தடுக்க வேண்டும்.
எனவே, நாட்டில் தற்போது தோன்றியிருக்கும் பிரச்சினையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவும், நாட்டு மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கும் இலங்கை மக்கள் அனைவரும் ஜனாதிபதி அவர்க ளுடனும், அவர் தலைமையிலான அரசாங்கத்துடனும் ஒன்றிணைய வேண் டும்.
சிரேஷ்ட அரசியல்வாதி என்ற முறையில் இந்தக் கோரிக்கையை நாட்டு மக்களிடம் முன்வைப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.