......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 December 2012

தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்க தயார்: பிரதம நீதியரசர்

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை எதிர்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துவிட்ட நிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது அரசாங்க உறுப்பினர்களின் அறிக்கையாகும். அந்த அறிக்கைக்கும் பதிலளிப்பதற்கு நான் தயார் என்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார்.


தெரிவுக்குழுவிலிருந்து எதிரணியினர் வெளிநடப்பு செய்திருந்த நிலையில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு  வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  தனக்கு எதிரான குற்றப்பிரேரணையை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தெரிவிக் குழுவின் அறிக்கையானது, அரசாங்க உறுப்பினர்களின் அறிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தனது சட்டத்தரணிகள் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தெரிவுக் குழுவின் அறிக்கை தமக்கு இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை அவ்வாறு கிடைத்தால் அரசாங்கத்தின் இந்த அறிக்கைக்கு நான் பதிலளிப்பேன்.

தெரிவுக்குழுவில் ஒரு தரப்பினரின் வாதத்தை மாத்திரம் ஏற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை. குறுக்கு விசாரணைகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் முக்கிய சாட்சிகள் அளித்துள்ள ஆவணங்களின் உண்மையற்ற தன்மையை தன்னால் நிரூபித்திருக்க முடியும்.

இந்த விசாரணை ஆவணங்கள் ஓர் அடிப்படையில் தான் அமையும் என்று முதலில் தனக்கு அறிவிக்கப்பட்டது, அதனால் தான் வெளிநடப்பு செய்த பிறகு, 16 சாட்சியங்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கூறியது பதிவுசெய்யப்பட்டுள்ளது, அந்த சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யக் கூடிய வாய்ப்புகள் நீதியரசருக்கு அளிக்கப்படவில்லை.

தன்மீது கூறப்பட்டுள்ள அனைத்து புகார்களும் அடிப்படையற்றவை என்றும், காழ்ப்புணர்வால் கூறப்படுபவை என்றும் தான் குற்றமற்றவர் தெரிவுக் குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்தவுடன், தன்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை தன்னால் நிருபிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியசருக்கு எதிராக வைக்கப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஆராய்ந்த தெரிவுக் குழு அவர் மீதான 3 குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தியது. ஏனைய இரண்டில் இருந்து அவரை விடுவித்தது. மொத்தம் 14 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் முதல் ஐந்து குற்றச்சாட்டுகள் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விசாரணையின் முதல் நாளிலேயே பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வெளிநடப்பு செய்தார். இதில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு அடுத்தநாள் விலகிக் கொண்டனர். அதன் பிறகுதான் அவர் மீது குற்றம் காணப்பட்டதாக தெரிவுக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE