......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

அதிபர்களின் கவனக் குறைவால் இறுதி நேரத்தில் பெரும் நெருக்கடி


பிந்திய விண்ணப்பங்களே காலதாமதத்துக்கு காரணம்
- ஆட்பதிவுத் திணைக்களப் பணிப்பாளர்
பாடசாலை அதிபர்களின் கவனக் குறைவால் இறுதித் தறுவாயில் தாங்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தேவப்பிரிய நேற்று தினகர னுக்குத் தெரிவித்தார்.

எதிர்வ ரும் 11 ஆம் திகதி க. பொ. த. பரீட் சைக்குத் தோற்றும் மாணவர்களுடைய விண்ணப்பப் படிவங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பி வைக்காததன் காரணமாகவே அம்மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னமே விண்ணப்பித்த சகல மாண வர்களுக்கும் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 16 வயதை பூர்த்தியடையாத பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு தபால் அடையாள அட்டையை உபயோகிக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஏனைய மாணவர்களுக்கு 16 வயது பூர்த்தியாகும் ஒவ்வொரு மாதமும் அவரவருக்குரிய பூரணப் படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்க வேண்டு மெனத் தெரிவித்து கல்வியமைச்சுடன் இணைந்து சுற்றறிக்கை யினை வெளியிட்டிருந்தோம்.
 பாடசாலை அதிபர்கள் இதற்கு முன்னுரிமையளிக்காது அனைத்து விண்ணப்பங்களையும் இறுதி நேரத்தில் அனுப்பி வைத்தமையினாலேயே எமக்கும் வேலைப்பளு அதிகரித்துள்ளதுடன் காலதாமதமும் ஏற்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை தொடர்பான அனைத்து எழுத்துப் பணிகளும் கையா லேயே முன்னெடுக்கப்படுவதனால் எம்மால் இயன்றளவு பணிகளை துரி தப்படுத்தி வருகிறோம். ஆகக்குறைந்தது நாளொன்றுக்கு மூவாயிரம் தேசிய அடையாள அட்டைகள் தயார் செய்யப் படுகின்றன. இதன்படி, அநேக பாடசாலை களுக்கான தேசிய அடையாள அட்டைகள் அடங்கிய பொதிகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏனையவை விரைவில் அனுப்பி வைக்கப்படுமெனவும் பிரதி ஆணையாளர் தேவப்பிரிய கூறினார்.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE