கிழக்கு மாகாண விவசாய அபிவிருத்தி கால்நடை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (2.12.2012) மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாமுனை கிராமத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது பாலமுனையிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமதுக்கு வரவேற்பளித்தனர்.
இங்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு பள்ளிவாயல் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டார்.
இதன் போது மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அங்கு நடைபெற்ற கூட்டமொன்றிலும் பங்குபற்றினார். பொதுமக்களை சந்தித்த மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கிராமத்தின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.