......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 17 December 2012

கார் பந்தய மயக்கத்தில் மக்கள்-பெற்றோலின் விலையை உயர்த்தியது அரசு : திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.


By Hafeez மோட்டார்க்கார் பந்தய மயக்கத்தில் பொதுமக்கள் இருக்கும்போது அரசு பெற்றோலின் விலையை லீற்றருக்குப் பத்து ரூபாவால் அதிகரித்துள்ளதாக ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களில் 70 சதவீதமானவை பெற்றோல் மூலம் இயங்குபவை. அதிலும் 65 வீதமானவை மோட்டார் சைக்கிள்களாகும்.

இவ்வாறு பெற்றோல் மூலம் இயங்கும் மோட்டார் வண்டிகளைப் பயன்படுத்துவோர் சாதாரண மக்களே.
எனவே கார்ப்பந்தயத்தைக் காட்டி அதில் மக்கள் மயங்கிக் கொண்டிருக்கும் போது அரசு பெற்றொல் விலையை உயர்த்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE