நிரூஷி விமலவீர
செயற்குழுவில் எதிர்ப்பு வந்தால் வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்
ஐ. தே. கவின் பிரதித் தலைவர். உப தலைவர். தேசிய அமைப்பாளர் உட்பட பிரதான பதவிகளுக்கு தகுதி படைத்தோர் ஜனவரி 10 ஆம் திகதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் நியமிக்கப்படுவரென ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
03 பிரதான பதவிகளுக்கும் ஆட்களை நியமிக்கும் போது முழு செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு வெளியிட்டால், மற்றுமொரு பெயர் பிரேரிக்கப்படுமென்றும் அதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் பொதுச் செயலர் தெரிவித்தார்.
செயற்குழுவில் 92 பேர் உள்ளனர். இதில் 31 பேர் பிரேரிக்கும் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
பிரதான மூன்று பதவிகளில் இரு பதவிகளுக்காக கம்பஹா மாவட்ட எம். பி. ருவன் விஜேவர்தனவின் பெயரும், கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணா நாயக்காவின் பெயரும் தெரிவிக்கப்படும் என்றும் ஐ. தே. க. வட்டாரங்கள் தெரி விக்கின்றன. (எப். எம்.)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.