......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

மன்னாரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்


By Lambert இந்திய வீட்டுத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் அநீதியான முறையில் பகிரப்பட்டமையினை கண்டித்து மன்னார் பிரஜைகள் குழுவும், மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு மற்றும் காணியுரிமைக்கான மக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.


யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து பல இன்னல்களைக் கடந்து மீள்குடியேறிய மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வில் இடம்பெற்ற அநீதியைச் சுட்டிக்காட்டியும், நீதியான முறையில் பகிர்வுகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும், அதே யுத்தத்தில் இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறி தொழில் துறைகளை இழந்த மீனவர்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் உபகரணங்களையும் வழங்குவதில் காட்டப்படும் பாரபட்ச செயற்பாடுகளை கண்டித்தும் அவற்றின் தெரிவிலும், விநியோகத்திலும் சீர் செய்யுமாறு கோரியும் குறித்த உண்ணாவிரதம் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்திலிருந்து அனைத்து கிராமங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மீள்குடியேற்றக் கிராம மக்கள் அதிகளவில் கலந்துகொண்டனர்.

நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள் என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று மாலை 3 மணியளவில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE