......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

இலங்கைகயர் திருப்பி அனுப்பப்படுகின்ற போதும் ஆஸி.க்கு வருவோரின் எண்ணிக்கை குறையவில்லை: அவுஸ்திரேலிய ஊடகம்

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர்கள் பலர் தொடர்ந்தும் வெளியேற்றப்படுகின்ற போதும், அங்கு அகதி அந்தஸ்து கோருவோரின் எண்ணிக்கை குறையவில்லை என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட 700 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

எனினும், இந்த ஆண்டு 6 ஆயிரம் இலங்கையர்கள் அங்கு அகதி அந்தஸ்து கோரி சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

3000 பேர் வரையில் இலங்கையில் இருந்து செல்லும் போதே கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமது அரசாங்கம், இலங்கை அகதிகளை நாடுகடத்தும் செயற்பாடுகளை கைவிடப்போவதில்லை என்றும் கட்டம் கட்டமாக அவர்கள் நாடுகடத்தப்படுவர் என்றும் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களும் இருக்கலாம் என்று கருதப்படும் சட்டவிரோத அகதிகள் 147 பேரைக் கொண்ட இரண்டு படகுகள் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில் முதலாவது படகில் 34 புகலிடக்கோரிக்கையாளர்களும் 2 படகு செலுத்துனர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அருகிலேயே பிறிதொரு படகை இருவர் செலுத்தி வந்ததுடன் குறித்த படகில் இருந்து 109 சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE