கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்கார் மாகாணத் தலைநகரான ஜலாலாபாத்தில் உள்ள விமான நிலைய வளாகத்தில் நேட்டோ படைத் தளம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு நேட்டோ தளத்தின் வாயிலில் தலிபான்கள் கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதன் பின்னர் தற்கொலைப் படையினர் நேட்டோ தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பங்கேற்ற 8 தற்கொலை படையினரும் கொல்லப்பட்டதாக ஆப்கான் உளவுப் பிரிவு பி.பி.சி.க்கு கூறியுள்ளது. தவிர ஆப்கான் பாதுகாப்பு படையினர் ஒருவரும் கொல்லப்பட்டதாக நேட்டோ பேச்சாளர் அறிவித்துள்ளார். எனினும் தலிபானின் இந்த தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்ததாக நேட்டோ கூறியுள்ளது.
விமான நிலைய வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு இருந்தும் தீவிரவாதிகள் அதையும் மீறி வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். முன்னதாக இதே விமான நிலையத்தை இந்த ஆண்டு தீவிரவாதிகள் இரண்டு முறை தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுக் காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
(thinakaran)
()
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.