பிரிட்டனில் மகாராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறி அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வைர விழாக் கொண்டாட்டங்களின் கடைசி உத்தியோகபூர்வ நிகழ்ச்சியாக பிரிட்டிஷ் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் ராணியார் இன்று செவ்வாயன்று பங்கேற்றுள்ளார்.
இது தொடர்பில் பிபிசி செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்கின்ற முதலாவது மகாராணி இவராவார்.
எலிசபெத் மகாராணியை கௌரவிக்கும் விதமாக அண்டார்டிக் கண்டத்தில் பிரிட்டனுக்குச் சொந்தமான நிலப்பரப்புக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் சாதாரணமாக பிரதமர் அமருகின்ற இருக்கையில் மகாராணி அமர்ந்திருந்தார்.
பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் வேண்டி அமெரிக்கா போரிட்ட வேளையில்தான் இதற்கு முன்னால் பிரிட்டிஷ் மன்னர் ஒருவர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார் என்பதை பிரதமர் கேமரன் இதன்போது சுட்டிக்காட்டினார.;
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.