......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 December 2012

வைப்பு செய்த கோடீஸ்வர தம்பதியினர் இன்று வசிக்க வீடின்றி பெரும் அவலம்


கோல்டன் கீ:

கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் தாங்கள் வைப்பு செய்த பணம் திவாலாகியதனால் மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்தவர்களின் குடும்பத்தினரை விரைவில் வீதியிறக்கி உச்சநீதிமன்றத்தின் ஒரு தலைப்பட்சமான செயற்பாட்டினை கண்டிக்கும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு இந்த நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்து தங்கள் பணத்தை இழந்தவர்களின் சங்கம் தற்போது ஒழுங்குகளை செய்து வருகின்றது.

கோடிக்கணக்கான ரூபாக்களை முதலீடு செய்த பலர் இன்று ஒரு சதமேனும் இல்லாமல் வீதியில் நடைப்பிணங்களாக திரிவதற்கு ஒரு வகையில் உச்சநீதிமன்றத்தின் பலவீனமே காரணமாக இருக்கிறதென்றும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளார்கள்.
இந்த 20 பேரைவிட மேலும் பலர் தங்களது பணம் முழுவதையும் கோல்டன் கீ நிறுவனம் திருப்பி செலுத்தத் தவறியமையால் இன்று மன அழுத்தங்களுக்கு இலக்காகி மன நோயாளிகளாகவும் மாறியிருக்கிறார்கள்.
வேறு சிலர் உண்ண உணவின்றி நோய்க்கு மருந்து எடுப்பதற்கு கூட கையில் காசின்றி பெரும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயோதிப தம்பதிகள் தங்கள் சொத்துக்கள் அனைத்தை யும் பராமரிப்பது கஷ்டமாக இருந்த காரணத்தினால் விற்று பலகோடி ரூபாக் களை கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்பு செய்து அதிலிருந்து கிடைக்கும் மாதாந்தம் ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் ரூபாவில் ஒரு சொகு வீட்டை வாடகைக்கு எடுத்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கோல்டன் கீ நிறுவனம் திவாலாகியதை அடுத்து இந்த வயோதிப தம்பதிகளுக்கு கிடைத்த வருமானம் நின்றுவிட்டது. முதலில் பல மாதங்களுக்கு அவர்களை அதே வீட்டில் வாழ்வதற்கு இடமளித்த அந்த கட்டிடத் தொகுதியின் உரிமையாளர் இறுதியில் பணம் கிடைக்காது என்பது உறுதியாகியதை அடுத்து அந்த வயோதிப தம்பதிகளை வீட்டை விட்டே வெளி யேற்றிவிட்டார்.
இப்போது அவர்கள் தங்கள் தூரத்து உறவுக்காரர்களை அண்டி அவர்களின் வசதிகள் அதிகம் இல்லாத வீட்டில் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப் படுகிறது.
இந்த வயோதிப தம்பதியர் ஏன் இவ்வளவு பெரும் தொகையை கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்புச் செய்தார்கள் என்று கேட்ட போது, திரு. கொத்த லாவலைக்கு 65 தனியார் நிறுவனங்கள் இருப்பதனால் கோல்டன் கீ நிறுவனம் என்றுமே நஷ்டத்தில் இயங்காது என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் இதில் இவ்வளவு பெரும் தொகையை வைப்பில் இட்டோம் என்று தெரிவித்தனர். இப்போது தான் எங்களுக்கு அந்த 65 நிறுவனங்களும் பெயர் பலகைகளுடன் இருந்து வந்த வருமானமற்ற நிறுவனங்கள் என்ற உண்மை தெரியவந்தது என்று அந்த தம்பதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE