......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 December 2012

'இலங்கையின் ஆணைக்கு செயற்படுமளவுக்கு இந்திய இறையாண்மை வலுவிழந்துள்ளது'

இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்கு இணங்கி செயற்படக்கூடிய அளவுக்கு இந்திய இறையாண்மையும் தமிழக அரசின் இறையாண்மையும் வலுவிழந்த நிலையில் இருக்கிறது. இதையிட்டு தான் விடுதலைச் சிறுத்தைகள்  தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 


தமிழ்நாட்டில் சட்டத்திற்கு விரோதமாகவோ சமூகத்திற்கு விரோதமாகவோ எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாதஇளைஞர்களை திடீரெனக் கைது செய்திருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆணையே பின்னணியாக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
'சென்னை, பல்லாவரம் அருகே தங்கிவரும் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் 10பேரை அண்மையில் தமிழக கியூ பிரிவு புலனாய்வுத் துறையினர் திடீரென கைது செய்து அவர்களில் நால்வரை மட்டும் பொய் வழக்கில் சிறைப்படுத்தியுள்ளனர். எஞ்சியுள்ள 6பேர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை.  

சிறைப்படுத்தப்பட்டுள்ள நான்கு இளைஞர்களும் தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது இந்திய அரசுக்கு எதிராகவோ எத்தகைய குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்று அதே புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனாலும், அவர்கள் பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டிருப்பது ஏன் என்று விளங்கவில்லை.  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மற்ற 6 இளைஞர்களையும் இன்னும் ஏன் விடுவிக்கவில்லை என்பதும் தெரியவில்லை. 
 
தமிழக காவல்துறையின் இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கையின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக தெரியவருகிறது. அதாவது, அண்மையில் கொழும்பு நகரத்தில் பிடிபட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுடைய நண்பர்கள் தமிழ்நாட்டில் பல்லாவரம் பகுதியில் சிலர் தங்கியிருக்கிறார்கள் என்றும் இலங்கை  ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்குத் தெரிவித்ததாகவும், அதனடிப்படையில் தமிழக அரசுக்கு இத்தகவல் தரப்பட்டு கொழும்பில் பிடிபட்ட இளைஞர்களின் நண்பர்கள் என சந்தேகத்தின் பெயரில் இவர்களை கியூ பிரிவு புலனாய்வுத் துறையினர் கைது செய்திருக்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் தெரிய வருகிறது. 

தமிழ்நாட்டில் சட்டத்திற்கு விரோதமாகவோ சமூகத்திற்கு விரோதமாகவோ எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாத அந்த இளைஞர்களை திடீரெனக் கைது செய்திருப்பதற்கு வேறென்ன பின்னணியாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இலங்கை அரசின் ஆணைக்கிணங்கி செயல்படக்கூடிய அளவுக்கு இந்திய இறையாண்மையும் தமிழக அரசின் இறையாண்மையும் வலுவிழந்த நிலையில் இருக்கிறதோ என்கிற கவலையே எழுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். (நக்கீரன்) 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE