......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

நாட்டுக்கு நல்ல விஷயம் அல்ல: சம்பந்தன்

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை ஒரு முக்கியமான விஷயம், ஆனால் அதை பக்கசார்பற்ற முறையில் கையாளக் கூடிய ஒழுங்குகள் தற்போது நாட்டில் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


ஷிராணி பண்டாரநாயக்க மீதான ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். 

இந்நிலையில் இது தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றத்துக்கும் உயர்நீதிமன்றத்துக்கும் இடையே இவ்விதமான ஒரு சச்சரவு, ஒரு மோதல், ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது நாட்டைப் பொறுத்தவரை ஒரு நல்ல விஷயம் அல்ல.

ஆனால் அரசியல் ரீதியாக செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது, இந்த மாதிரியான நிலைமைகளை தவிர்ப்பது கடினம் என்றார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE