......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

ஐ.தே.கவிலிருந்து சமூகத்துக்கு பணியாற்ற முடியாது


எம். ஏ. அமீனுல்லா
வங்குரோத்து அடைந்துள்ள ஐ. தே. க. விலிருந்து கொண்டு நாம் எந்த சமூகத்துக்கும் திருப்திகரமான ஒரு பணியையும் மேற்கொள்ள முடியாது. ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ள நான் எனது பிரதேசத்தில் தற்போது 400 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளேன் என சுற்றாடல் துறை பிரதி அமைச்சரும் கண்டி மாவட்ட எம். பி.யுமான ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையில் நேற்று (4) இடம் பெற்ற சபை அமர்வில் பார்வையாளராக பிரசன்னமாகியிருந்த பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
எனது மருமகன் எம். ஆர். எம். அம்ஜாட் மத்திய மாகாணத்தில் சபையின் எதிர்க்கட்சியான ஐ. தே. க. வில் உறுப்பினராக இருந்து வருகின்றார். இக் கட்சியில் உறுப்பினராக இருந்து வரும் ஐ. தே. க. உறுப்பினரால் தனது சமூகத்துக்கோ அல்லது பிரதேசத்துக்கோ எதுவித சேவைகளையும் செய்யமுடியாமல் இருக்கின்ற இந் நிலையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுமிடத்து நான் 250 மில்லியன் ரூபா வழங்கியுள்ளேன்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் நாம் பல உதவிகளை பெற்றுள்ளோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது தலைமையைக் கொண்ட அரசாங்கத்தில் தற்போது பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கு நாம் எமது ஆக்க பூர்வமான உதவிகளை நல்க வேண்டும்.
இந்த வகையில் தான் எனது மருமகனும் சபையின் எதிர்க்கட்சியான ஐ. தே. க. வினது உறுப்பினரான ஜனாப் எம். ஆர். எம். அம்ஜாட் மத்திய மாகாண சபையில் ஆளும் கட்சியினால் முன்னெடுத்து வரும் நல்ல பல திட்டங் களுக்கு ஆதரவு வழங்கும் படி நான் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளேன் என்றார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE