இது குறித்து அமைச்சர் தெரிவிக்கையில்,
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மடு, முசலி, நானாட்டான், மன்னார் நகர பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், இவர்களுக்கு நிவாரணங்களை வழங்கத் தேவையான நிதிகளை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும் தாம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கேட்டுக் கொண்டதற்கமைவாக போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதேவேளை, வெள்ளத்தால் மடு, சிலாபத்துறை பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்களை அக்கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாதுள்ள நிலையில், கடற்படையின் உதவியுடன் படகு மூலம் அதனை விநியோகிக்க போதுமான நடவடிக்கையெடுக்குமாறு அப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான கடற்படை பொறுப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கத் தேவையான உதவிகளை நல்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்தனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் விபரங்களை சேகரிக்குமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் பிராந்திய விவசாய பணிப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.