பொதுவாக ரொக்கெட்டு களை ஒருமுறை பயன் படுத்தி விட்டால், அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது ஆனால் பலமுறை விண்ணில் சென்று வரும் வகையிலான ரொக்கெட்டுகளை தயாரித்து இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதனால் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வருவதற்கான செலவு மிகவும் குறையும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நவீன ரொக் கெட்டுக்கு “கிரொஸ்கோப்பர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. விண்வெளிக்கு சுற்றுலா செல்வதை வர்த்தக ரீதியில் வெற்றிகரமான நடத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிக முனைப்பு காட்டி வருகிறது. விண்வெளிக்கு ரொக்கெட்டை ஏவிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.
“கிரொஸ்கோப்பர் ரொக்கெட் இதற்கு முன்பு இருமுறை பரிசோதனைக்கு உள்ளாகியது. ஆனால் இந்த முறை எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(thinakara)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.