அண்மைய வன்முறைகளுக்கு ஜனாதிபதி மொஹமட் முர்சி எதிர்ப்பாளர்களே காரணம் என்றும் அவர்கள் நாட்டுக்கு ஒரு நோயாக உருவெடுத்து வருவதாகவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் பாத்தி விமர்சித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பு வன்முறையை தூண்டவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினருக்கும் முர்சி எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் 7 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக் கானோர் காயமடைந்தனர்.
“இந்த மோதலில் எமது 6 பேர் தியாகிகளாயினர். 1439 பேர் காயமடைந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள்.
எமது தலைமையகம் உட்பட 28 அலுவலகங்கள் தீமூட்டப் பட்டன.
இதில் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் பத்திரிகை தலைமையகமும் பற்றவைக்கப்பட்டது” என்று பாத்தி விளக்கினார்.
கெய்ரோவிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் கூடாரமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திவந்த எதிர்ப்பாளர்க ளை கடந்த புதன்கிழமை அங்கு வந்த மொஹமத் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அடித்துத் துரத்தியதை அடுத்து அங்கு குவிந்த எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின ரைத்தாக்க ஆரம்பித்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்டோர் கூறியுள்ளனர்.
இந்த மோதலில் பலர் இரும்பு குண்டு தாக்கியே காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரிடம் துப்பாக்கி சூட்டு காயம் உள்ளது உறுதியாகியு ள்ளது. இதன்போது எதிர்ப்பாளர்களிடம் சிக்கிய முர்சி ஆதரவாளர்கள், தம்மைக் கடுமையாகத் தாக்கிவிட்டே பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக முறையிட்டுள்ளனர்.
“எமது சகோதர உறுப்பினர் ஒருவர் கூட ஆயுதத்துடன் கைது செய்யப்படவில்லை.
நாம் இரத்தம் சிந்த தாக்கியதாக எவராவது கூறினால் அவரை காட்டுங்கள் பார்க்கலாம்” என்றும் பாத்தி சவால் விடுத்தார்.
இதில் எகிப்து அரசை தாம் பின்னணியில் நின்று நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் பாத்தி மறுத்தார்.
“உண்மையில் நான் ஆட்சியில் இருந்தால் எனது அலுவலகத்தை சுற்றி வளைப்பதற்கும் எனது ஆவணங் களை அழிப்பதற்கும் சாத்தியம் இருக்கிறதா? எனது சொந்த தலைமையகத்தையே பாதுகாக்க முடியாமல் நான் எப்படி ஆட்சி செய்பவனாக இருக்க முடியும்? தற்போது நடைபெறுவதற்கு அரசியல் பின்னணியில் இல்லை. குறிப்பிட்ட ஒரு சில நோக்கங்கள் மற்றும் பணமுமே காரணமாக இருக்கிறது.
அது நாட்டுக்கு நல்லதை ஏற்படுத்தாது” என்றார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.