......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 December 2012

சுங்க வரி அதிகரிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இந்திய ஆட்டோமொபைல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க வரியை இலங்கை பலமடங்கு அதிகரித்திருப்பது தமக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது.


சுங்க வரி அதிகரிப்பு தொழில் துறையில் பாரிய தாக்கத்தையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இதுதொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சிகள்  மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இலங்கை மிகவும் முக்கியமான வாடிக்கையாளர் நாடு ஆகும்.

இந்திய கார் மற்றும் பிற வாகனங்கள் கடந்த ஆண்டு மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கைக்கு ஏற்றுமதியாகியுள்ளன. அந்த நிலையில், இலங்கையின் திடீர் முடிவு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார் மீதான சுங்க வரியை 73 சதமும், மூன்று சக்கர வாகனங்கள் மீதான வரியை 45 சதமும் உயர்த்தியது. 

வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீதான வரியும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE