வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பான்னு என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலை படையை சேர்ந்த 3 தீவிரவாதிகள் பொலிஸ் நிலையம் வந்துள்ளனர். அப்போது அவர்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர்.
பொலிஸார் அப்போது அவர்களில் ஒருவன் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இருந்தும் அவன் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். தகவல் அறிந்ததும், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவன் ஒருவர் பலியாகினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.