அரசாங்க மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கணினிகள் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதனால் கணினி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
"உபாயத்தை வகுத்துக்கொள், திட்டமிடு, செயற்படுத்து, வினைத்திறன் மிக்க பாதுகாப்புக்கான வழி" என்ற கருப்பொருளில் நேற்று நடந்த கணினி பாதுகாப்பு பற்றிய தேசிய மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முக்கிய தகவல்களை திருடவும், நிதியை கையாடவும், அப்பாவி மக்களை மோசடி திட்டங்களால் ஏமாற்றி பணம் பறிக்கவும், தகவல் தொழிநுட்ப உட்கட்டமைப்பை முழுதாக அழித்துவிடவும் கணினிசார் குற்றச்செயல்களை மேற்கொண்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.
கடன் அட்டை, வரவட்டை பற்றிய தகவல்களை திருடுவதற்கு உபகரணங்களை கடைகளிலும் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களிலும் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் பொருத்தி வருவதனால் நிதி சேவைகளில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன என அவர் கூறினார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.