இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். கொழும்பில் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு நீதிச்சேவை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் வருகை தந்தபோதே நீதவானின் மணிபர்ஸ் பிக்பொக்கட் அடிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து ரயிலில் வருகைதந்த வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின் மணிபர்ஸே இவ்வாறு பிக்பொக்கட் அடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் என்று தெரிவித்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.