......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 December 2012

எமது நலனில் அக்கறை இல்லை: இலங்கை தொழிலாளர்கள்

சவூதி அரேபியாவின் டமாமிலுள்ள தடுப்பு முகாமில் 2 மாதங்களாக தங்கியுள்ள இலங்கை தொழிலாளர்கள் 52 பேர், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை அதிகாரிகள் தமது நலனில் எந்த அக்கறையும் காட்டவில்லையென முறையிடுகின்றனர்.


சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை அதிகாரிகள் தம்மை விடுவிக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இவர்கள் தங்களது விடயத்தில் தலையிட இலஞ்சம் மற்றும் வேறு வகை ஊக்குவிப்புக்களை கோருவதாகவும் மேற்படி தடுப்பு முகாமிலுள்ளவர்களில் ஒருவர் டெய்லிமிரருக்கு தொலைபேசி மூலம் கூறினார். 

'நாம் உரிய முறையில் முறைப்பாடு செய்துள்ளோம். இலங்கையிலுள்ள எமது உறவினர்களும் எமது சார்பில் முறைப்பாடு செய்துள்ளனர். இருப்பினும் அவர்கள் எம்மை முற்றாக புறக்கணித்துவிட்டனர்' என அவர் கூறினார். 

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு உறவுகள் பிரதி பொது முகாமையாளர் டி.பி.சேனநாயக்கவிடம் டெய்லிமிரர் வினவியபோது, நாம் சவூதி அரேபியாவின் சட்ட செயன்முறைகளை அவதானித்து வருகின்றோம் எனக் கூறினார். 

'இந்த தடுப்பு முகாமில் பல்வேறு நாட்டு மக்கள் உள்ளனர். இவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வரையும் அவர்கள் அங்குதான் இருக்க வேண்டும்' என அவர் கூறினார். 

'விதிகளுக்கு அமைய மாதத்தில் 3 தடவைகள் இலங்கைத் தூதரக அதிகாரிகள் அவர்களை சென்று பார்க்கின்றனர். விடயங்கள் நடந்துகொண்டுள்ளன. இவர்களை விடுவிக்க நாம் எம்மாலான அனைத்தையும் செய்துவருகின்றோம்' என அவர் கூறினார். 


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE