......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

தொழிலாளர்களுக்கான சேவைகாலப்பணம் மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை வழங்க முடிவு

மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபைக்கு சொந்தமான பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களினதும், தோட்ட உத்தியோகத்தர்களினதும் சேவைகாலப்பணம் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் வழங்கப்பட்டுவிடுமென இ.தொ.கா உப தலைவர்களில் ஒருவரும் சிரேஸ்ட தொழிலுறவு இயக்குனருமான எம்.வேங்குருசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் தோட்ட அபிவிருத்திசபையின் மனிதவள நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹர்ஷினி விஜயசேகரவுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இத்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட உத்தியோகஸ்தர்கள் அடங்கலாக சுமார் 2918 பேருக்கு வழங்கப்பட வேண்டிய சேவைப்பாலக் கொடுப்பனவுகள், நிலுவை தொகையுடன் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படவுள்ளதாகவும், தற்போது விபரங்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2001ஆம் ஆண்டு தொடக்கம் இ.தொ.கா இதற்கான தேவையான நடவடிக்கைகளை பல சுற்று பேச்சுவார்த்தையின் ஊடாக மேற்கொண்டிருந்த போதிலும், அவை பயனளிக்கவி;ல்லையென்றாலும், இ.தொ.கா வின் இடைவிடாத பெரும் முயற்சியால் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக 11 வருடங்களுக்கு பின்னராவது இந்த கொடுப்பனவுகளை வழங்க மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை இணங்கியமை வரவேற்கத்தக்கது. 

மாத்தளை, கண்டி, நாவலபிட்டி, மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்களும், உத்தியோகஸ்தர்களும், தோட்ட நிர்வாகங்களால் இழுத்தடிப்புக்கும், இழுபறிக்கும் மத்தியில் இவ்விதமான அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள். இவர்களது எதிர்பார்ப்பை இ.தொ.கா என்றும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தொழிலாளர்களுக்கு நிச்சயம் உண்டு என திரு.வேங்குருசாமி மேலும் தெரிவித்தார்.

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE