......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

அரசை கண்டிக்க பிரதம நீதியரசர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவு


உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தமக்கு ஆதரவு திரட்டி அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளினதும் கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்த போதிலும் பெரும்பாலான நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் அதற்கு ஒத்துழைப்பு நல்காத காரணத்தினால் பிரதம நீதியரசரின் இது தொடர்பான முயற்சிகள் பிசுபிசுத்து போய்விட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தனது பதவியையும் அதிகாரத்தையும் தவறான முறையில் பயன்படுத்தி, நாட்டில் உள்ள நீதிபதிகளையும், சட்டத் தரணிகளையும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுத்துவதற்கு எடுத்த முயற்சி படுதோல்வி யடைந்திருப்பதாக ஊடகவியலாளர் மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நீதிமன்ற ஊழியர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமையன்று நடைபெறவிருந்தது. உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் பிரதம நீதியரசரை தொடர்ந்து அப்பதவியில் தக்கவைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் மிகக் குறைந்தளவிலேயே சமுகமளித்திருந்தனர். இதனால் கூட்டத்தை நடத்துவதற்குரிய கோரத்தைக் கூட அங்கு வந்தவர்களினால் பூர்த்தி செய்ய முடியாதிருந்ததனால் இந்தக் கூட்டம் நடைபெறாது அங்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதே வேளையில் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட நீதிபதிகள் மற்றும் மேன் முறையீட்டு நீதிபதிகள் கூட்டமொன்றை அவ சரமாக ஒழுங்கு செய்யுமாறு கேட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இதற்கமைய இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சம்பந்தப் பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நீதிபதிகள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படு கிறார்கள் என்ற கருத்தை உலகநாடுகளுக்கு எடுத்துக்காட்டும் நோக்கத்துடனேயே இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கான பணிப்புரையை பிரதம நீதியரசர் அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்தக் கோரிக்கையையும் மாவட்ட நீதிபதிகளும் மேன்முறையீட்டு நீதி அரசர்களும் நிராகரித்ததால் இந்தக் கூட்டமும் நடைபெறாது என்று ஊடகவியலாளர் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இது தொடர்பாக கூட்டங்களை நடத்துவதோ, அது பற்றி பேச்சுவார்த்தைகள் கலந்துரையாடல்களை நடத்துவதும் நீதி சுதந்திர சம்பிரதாயத்திற்கு முரணான செயல் என்று சட்ட அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நீதிமன்ற ஊழியர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் மாவட்ட நீதிபதிகள் மேன் முறையீட்டு நீதி அரசர்களின் கூட்டத்தை அவ சரமாக நடத்துவதற்கு எடுத்துவரும் நடவடிக் கைகளுக்கு பெரும்பாலான சட்டத்தரணிகளும், நீதிபதிகளும், அதிருப் தியை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பொதுவாக நீதிமன்ற விசாரணைகள் நடைபெறும் தினங்களில் இவ்விதம் நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் தங்கள் கடமைகளை துறந்து கூட்டங்களை நடத்துமாறு வழியுறுத்துவது பெரும் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்பாடாகுமென்றும் இதனால் பொதுமக்களும், சட்டத்தரணிகளும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டுமென்று நீதித்துறை முக்கியஸ்தர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பத்திரிகை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது இந்த விசாரணையை தங்கு தடையின்றி நடத்துவதற்கு பாராளு மன்ற தெரிவுக்குழுவுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கு பதில் கண்ட, கண்ட இடங்களில் கூட்டங்களையும், கருத்துப் பறிமால்களையும் நடத்துவது தவறான செயல் என்று நீதித்துறை நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்ற தெரிவுக்குழு உச்சநீதிமன் றத்தின் நீதியரசருக்கு எதிராக குற்றப் பத்திரிகையை விசாரணை செய்து எடுக் கும் முடிவை சாதாரண பொதுமக்கள் தலைகுனிந்து ஏற்றுக் கொள்வதே பொருத்தமான விசயம் என்று சட்டத் தரணிகள் தெரிவித்தனர்.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE