பிள்ளைகளிள் தவறான வழியில் சென்றால் அதற்கான முழுப்பொறுப்பும் பெற்றோரையே சாரும்
மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க
பிள்ளைகள் அனைவரும் சமமானவர்களே, பெரியோர்கள் என்ற முறையில் நாம் பிள்ளைகள் மீது அன்பு கொண்டுள்ளோம். அனைவரது பிள்ளைகளையும் எமது பிள்ளைகள் போன்றே கவனிக்கின்றோம். மகன் ஒருவரதும் மகள் ஒருவரதும் தந்தை என்ற ரீதியில் யாழ்ப்பாணத்தின் பிள்ளைகளையும் எனது பிள்ளைகளை நோக்குவது போலவேநோக்கக்கூடிய தகுதியும் திறமையும் எனக்கு உண்டு.
எனினும் பிள்ளைகள் சிலரது முறையற்ற செயற்பாடுகளால் ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் வாழ்க்கை படுகுழியில் விழுவதை யாரும் எச்சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கப்போவதில்லை . யாழ்ப்பாணத் தின் ஆயிரக்கணக்கான பெற்றோர் தமது பிள்ளைகளை குணநலன் மிக்க பிள்ளை களாக சமூகத்திற்கு அனுப்புவதுபோல், ஒருசில பெற்றோர் மாத்திரம் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளை சமூகத்திற்கு அனுப்புவது ஏன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களை நாம் துர திர்ஷ்டவசமாக கண்டிருந்தாலும் பிள்ளைகளை நல்வழிப் படுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால், அதற்கான பொறுப்பிலிருந்து பெற்றோருக்கு ஒரு போதும் விடு பட முடியாது. பிள்ளைகள் அவ்வாறான தவறான வழியில் சென்று சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது, சட்டத்தையும் ஒழுங்கை யும் பாதுகாக்கும் அதிகாரிகள், ஏனையோரது நலனைக் கருத்தில் கொண்டு சட்டத்தை செயற்படுத்தும் இடத்து அதன் குற்றத்தை அரசாங்கத்தின் மீதோ அல்லது பாதுகாப்பு தரப்பின் மீதோ சுமத்துவது கடப்பாடல்ல. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் அண்மையில் நிகழ்ந்த சம்பவத்தின் மூல தாரமாவது, வங்குரோத்து அரசியல் வாதிகள், பயங்கரவாதத்திற்கு உரமூட்டி, பிள்ளைகளை தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது கையாட்களாக்கிக் கொண்டமையாகும்.
அந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாரும் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்காதமையினால் யாழ். பல்கலைக்கழகத் திற்குள் கலவரங்களும் குழப்பநிலையும் தோன்றுவதில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர்களது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ கல்வி பயில்வதாக நான் நம்புகின்றேன். யாழ்ப் பாண மாணவர்கள் தலையிட்டு மேற் கொள்ளும் கலவரங்கள் காரணமாக தமது கல்வியே இருளடையும் என்பதை அந்த மாணவர்களும் பெற்றோரும் புரிந்து கொள்ளாமையானது. அந்த மாணவர்களது பெற்றோரதும் பொதுவாக நாட்டினதும் அபாக்கியமே.
பொலிஸாரினால் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டமையானது, அவர்கள் மீது கொண்ட வெறுப்பினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல. நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் ஒழுங்கு மீறப்பட்டு ஏனையவர்களையும் அதற்காக உந்துதலளித்து அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணத்திலாகும். புலிப் பயங்கரவாதிகளால் தமது இயக்கத்திற்கு பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றும் பிள்ளைகளைக் கடத்தி சென்ற காலமும், மக்களின் பாதுபாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகள் ஊடாக பயணித்த காலமும், மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகள் இல் லாமையினால் தமது கல்வி நடவடிக்கை களை மேற்கொள்ள முடியாமல் இருந்த காலமும், சமாதானம் மலர்ந்து 03 வருடங்கள் கழியும்பொழுது வயது வந்த மாணவர்களும் பெற்றோர்களுக்கும் மறந்துபோயிருப்பது துரதிஷ்டமானதே.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பிள்ளைகள் சிலரை, தனிப்பட்ட முறையில் தலையிட்டு விடுவித்துக் கொள்வதற்காக நான் எடுத்த முயற்சி வெற்றியடைந் ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என் றாலும் ஏனைய மாணவர்கள் நால்வரும் தொடர்ந்தும் எமது தலைவர் பிரபாகரனே, நாங்கள் அவரின் ஆதரவாளர்களே என்ற கொள்கையுடன் இருக்கின்றனர். தமது வர்க்கத்தினரை மட்டுமன்றி முழு நாட்டை யும் அழிவுக்கு இட்டுச் சென்ற பயங்கரவாத கொலையாளியை, தமது தலைவனாக கருதும் கொள்கையில் இருக்கும் வரை யில் அவர்களின் விடுதலைக்காக நான் ஆஜராக முடியாததாகும். ஏனெனில் நாம் எனது பிள்ளைகளின் தந்தையைப்போன்று, யாழ்ப்பாணத்தில் இருக்கும் மேலும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் தந்தை என்பதுடன் பாதுகாப்பையும் வழங்கும் பாதுகாப்பு தரப்பின் பிரதானி என்பதாலாகும்.
தாய் ஒருவருக்கு தனது பிள்ளைக்காக கண்ணீர்விட வேண்டி ஏற்பட்டமையானது எனதோ அல்லது வேறு யாருடையதோ குற்றத்தினால் ஏற்பட்ட தொன்றன்று. பிள்ளையை உரிய வழி நடத்தாதது அந்தத் தாயின் குற்றமாகும். பிள்ளையை நேர்வழிப்படுத்தும் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ ஒரு போதும் கண்ணீர்விட வேண்டி ஏற்படாது. அந்தப் பெற்றோர் செய்யவேண்டிய தனது, குற்றம் புரிந்த தனது பிள்ளையை கைது செய்த பாது காப்பு தரப்பினர் மீது குற்றம் சுமத்தாமல் அவர்களை தவறான வழியில் செலுத்திய வங்குரோத்து அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துவதுடன், பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டத்தவறிய தம் மீதே குற்றம் சுமத்திக் கொள்வதாவும். பொலி ஸாரினால் மனிதப் படுகொலையாளர்களான பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான அந்த மாணவர்களை தடுத்து வைத்திருப்பது மேலும் ஆயிரக்கணக்கான பெற்றோர் கண்ணீர்விடுவதை தவிர்ப்பதற்காகும்.
சட்டத்தை அழுல்படுத்தும்போது குற்றம் புரிந்தவர் சிங்களமா, தமிழா, முஸ்லிமா என்ற விபரங்கள் முக்கியமல்ல. தெற்கே பல்கலைக்கழக மாணவர்கள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடு பட்ட சந்தர்ப்பங்களில், சட்டம் ஒரே வடிவிலேயே செயற்பட்டமை நீங்கள் நன்கறிந்த விடயமாகும். உங்கள் எதிர்பார்ப் பின்படி தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிப்பதானது, யாழ். கட்டளைத் தளபதியாகிய என்னால் நிறை வேற்ற முடியாத விடயம் என்பதை வருத்தத்துடன் தெரி வித்துக்கொள்வதுடன், அவர்கள பிரபாகரன் தமது தலைவர் என்ற தமது கொள்கையில் இருந்து விடுபட்டு உரிய வழிக்கு திரும்பிய பின்னர் விடுதலை பெறுவர்.
பொலிஸாரினாலும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினாலும் அவர்கள் விடுவிக் கப்படுவார்கள். அந்த மாணவர்களின் சமூக விரோத மனநிலையை மாற்றி, அவர்களை விடுவித்துக் கொள்வதை துரிதப்படுத்திக் கொள்வது பெற்றோர்களதும் அவர்களது கல்விக்கு பொறுப்பான யாழ். பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களதும் பொறுப் பென்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். நிலைமை அவ்வாறு இருக்கையில் குறிப்பிட்ட மாணவர்கள் 4 பேரையும் விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று கூறுவது அவர்களது எதிர்காலத்தை அவர்களே இருளடையச் செய்து கொள்வதாகும் என்றுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.