......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 16 December 2012

கெளரவம் நிறைந்த புனிதமான உயர்ந்த பதவிக்குரிய கறுப்புச் சீருடையில் பாதைகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்

அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போன்று சுலோக அட்டைகளுடன் சில சட்டத்தரணிகள் ;
மாபெரும் தவறு, அருவருக்கத்தக்க செயல் என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பொதுமக்களால் மதிக்கப்படும் கெளரவமான சட்டத்தரணிகள் இன்று அந்தப் புனிதமான உயர் பதவிக்குரிய சீருடையான கறுப்புக் கோர்ட்டுக்களை அணிந்துகொண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போன்று வீதிகளிலிறங்கி சுலோகங்களைத் தாங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
இது மிகப் பெரும் தவறு. பதவிக்கான சீருடையை அணிந்து கொண்டு அரசியல் செய்வது அருவருக்கத்தக்க செயல்.
இவ்வாறு செயற்படும் அவர்கள் யாரென்று பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சார்ந்தவர்களே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்தித்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். முன்னரும் இவ்வாறுதான் சீருடை அணிந்த ஒருவர் என்னுடன் மோதினார். ஆனால் அவர் உண்மையில் சீருடையில் இருக்கும்போது அரசியல் பேசவில்லை. என்னுடன் கருத்து முரண்பட்டபின் களணி விஹாரைக்குச் சென்று சீருடையைக் களைந்து வெள்ளை உடை அணிந்த பின்னரேயே அரசியல் பேசினார். அது எவ்வளவோ பரவாயில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எது எவ்வாறிருப்பினும் ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியில் செயற்பட சகலருக்கும் உரிமை உள்ளது. அரசாங்கம் அதில் ஒருபோதும் தலையிடாது. ஆனால் அரச அதிகாரி ஒருவர் தவறினைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டால் முதலில் அவர் உடனடியாகவே பதவிநீக்கம் செய்யப்படுவார். அவரது ஊதியம் நிறுத்தப்படும் அல்லது அரைமாதச் சம்பளமே வழங்கப்படும். விசாரணையின் முடிவிலேயே தீர்ப்பு வழங்கப் படும்.
சொத்துக்களை முறையாக அறிவிக்காது மறைத்த பல அரச அதிகாரிகள் சிறைக்குப் போன சம்பவங்களும் இந்நாட்டு வரலாற்றில் உள்ளதையும் ஜனாதிபதி அங்கு ஞாபகப்படுத்தி னார். பிரதம நீதியரசருக்கான குற்றப்பிரேரணை விடயத்தில் எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. நாம் எத்தகைய அழுத்தத்திற்கும் ஒருபோதும் அடிபணியவும் மாட்டோம். உண்மையில் இந்தக் குற்றப் பிரேரணைக்கு வித்திட்டது ஐக்கிய தேசியக் கட்சிதான். இன்று அவர்கள் இதற்கு எதிராக நிற்கின்றனர். ஆனாலும் நாம் அரசியலமைப் பிற்கிணங்கவே இதனை முன் னெடுத்து வருகின்றோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE